Advertisement

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை

அரசியல் பிப்ரவரி 23,2021 | 21:20 IST

Share

புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்காததால் கவிழ்ந்தது. சட்டசபையில் ஆளும்கட்சியான காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் சபையை விட்டு வெளியேறினர். இதனால் சபாநாயகர் சிவகொழுந்து, நம்பிக்கை தீர்மானம் நிறைவேறாததால் அரசு தோல்வியடைந்தது என அறிவித்தார். சபையிலிருந்து வெளியேறிய முதல்வர் நாராயணசாமி கவர்னர் தமிழிசையை சந்தித்து தனது அமைச்சரவையை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார். சட்டசபையில் அரசு கவிழ்ந்து விட்டதால் முதல்வர், அமைச்சர்கள் பதவியிழந்து விட்டனர். இதனிடையே, புதிய அரசு அமைக்க எதிர்கட்சிகள் உரிமை கோரவில்லை. சட்டசபை தேர்தல் அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் சட்டசபை நிகழ்வுகள் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு சட்டசபை செயலர், கவர்னருக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். இந்த அறிக்கையை வைத்து கவர்னர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி பரிந்துரை செய்ய உள்ளார். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரை செய்யும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X