Advertisement

தஞ்சாவூரில் திடீர் பரபரப்பு

பொது பிப்ரவரி 24,2021 | 22:20 IST

Share

தஞ்சாவூர், பிப். 25 - 'ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்திப்போம்' என்று, சசிகலா சென்னையில் கூறிய அதே வேளையில், தஞ்சாவூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில், அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க.வினர் ரகளையில் ஈடுபட்டனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று, அண்மையில் சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா தெரிவித்தார். அவர் சென்னையில் இதை தெரிவித்த, அதே நேரம், தஞ்சையில் அ.தி.மு.க.,வினர் மற்றும் அ.ம.மு.க.,வினர் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவசிலைக்கு, அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அ.ம.மு.க.,வினர் மற்றும் அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது சிலையை சுற்றி கட்டப்பட்டிருந்த அ.ம.மு.க., கொடிகளை அகற்ற அ.தி.மு.க.,வினர் சத்தமிட்டனர். அதற்கு அ.ம.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்க, இரு தரப்பு நிர்வாகிகள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீசார் விலக்கி, சமாதானப்படுத்தி அனுப்பினர். இருப்பினும், இருதரப்பினர்களுக்கும், ஒவ்வெருக்கு ஒருவர் கட்சியின் கொடி மாற்றி, மாற்றி கழற்றி வீசியப்படி சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X