செய்திச்சுருக்கம் பிப்ரவரி 25,2021 | 07:52 IST
பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். புதுச்சேரியில் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல் படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். மாலையில் கோவை செல்லும் பிரதமர் மோடி, 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். பின்னர் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, கலந்து கொண்டு பேசுகிறார்.
வாசகர் கருத்து