பொது பிப்ரவரி 25,2021 | 18:50 IST
14வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் அடங்கிய கூட்டமைப்பு ஸ்டிரைக்கில் பங்கேற்று உள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டனர். சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கம் போல் பஸ்கள் ஓடின. பல ஊர்களில் ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியாதல் பல மாவட்டங்களில் பாதிப்பு பெரிதாக தெரியவில்லை. அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில், பஸ் ஸ்டிரைக் தீவிரப்படுத்தப்படும் என்று சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்தார். பைட்
வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:
எவன் எப்படிப் போனாலும் சொகுசு விமானப் போக்குவரத்துக்கு ஒரு குறையும் இல்லை. அரசு செலவில் வந்து திட்டிட்டு போவாங்க.
மேலும் 1 கருத்துக்கள்...