Advertisement

காங்.,கை விட அதிகம் போட்டியிட முடிவு

அரசியல் பிப்ரவரி 27,2021 | 06:27 IST

Share

இம்மாதம், 14ல், சென்னை வந்த பிரதமர் மோடி, ஏழு ஜாதிகளை உள்ளடக்கி, தேவேந்திர குல வேளாளர் என, அழைப்பதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்தார். சென்னையில் பிரதமரை வீரமுத்தரையர் சங்கத் தலைவர் செல்லக்குமார் சந்தித்து பேசினார். இரண்டாம் கட்டமாக, 25 ல் கோவை பொதுக்கூட்டத்தில், மோடி பேசினார். அங்கு, முதல் முறையாக காமராஜர், 'கட் அவுட்' வைக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் மதிய உணவுதிட்டத்திற்கு, காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்ற, அவர்களின் கோரிக்கையும் பரிசீலனையில் உள்ளது. வன்னியர்களின் உள் ஒதுக்கீடு கோரிக்கையை அதிமுக அரசு ஏற்று மசோதா நிறைவேற்றி உள்ளது. இதற்கு மத்திய அரசு கொடுத்த அழுத்தமும் காரணம். இவ்வாறு, பரவலாக ஓட்டு வங்கி உள்ள ஜாதிகளுக்கு முன்னுரிமை அளித்தும், ஜாதி சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியும் வருகிறது மத்திய அரசு. இந்த மூன்று ஜாதியினர் தவிர, 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட, உயர் வகுப்பு ஜாதியினரின் ஓட்டுகளும் நம் பக்கம் திரும்பும் என பா.ஜ., எதிர்பார்க்கிறது. எனவே, காங்கிரசை விட அதிக தொகுதிகளில், பா.ஜ., போட்டியிட வேண்டும். லோக்சபா தொகுதிக்கு, ஒன்று வீதம், 40 சட்டசபை தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என, தமிழக பா.ஜ., மையக் குழு முடிவு செய்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X