பொது பிப்ரவரி 27,2021 | 20:50 IST
ஜெயலிதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, கோவை, வால்பாறையில் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, பாத்திரங்கள் வழங்குவதற்காக, அதிமுகவினர் டோக்கன்கள் வழங்கியிருந்தனர். இதற்கிடையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால், அந்த பொருட்களை எல்லாம், ரொட்டிக்கடை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்திருந்தனர். இது பற்றி எதிர்கட்சியினர் புகார் அளித்தனர். விடுதியில் ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள், 10 லட்சம் மதிப்புள்ள வேட்டி, சேலை, பாத்திரங்களை பறிமுதல் செய்தனர். விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.
வாசகர் கருத்து