பொது பிப்ரவரி 27,2021 | 21:54 IST
தஞ்சாவூர் நகரைச் சுற்றி பெய்யும் மழை நீரை, நாயக்கர் காலத்தில், செவ்வப்பன் ஏரிக்கு கொண்டு வந்து, சிவகங்கை குளத்தில் சேமிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கிருந்து தெளிந்த நீர், ஜலசுத்ரா எனும் அமைப்பு மூலம், சுடுமண் குழாய் வழியாக, மேல வீதியில் உள்ள ஐயன் குளத்திற்கும், மராட்டியர்கள் புதுப்பித்த சாமந்தான் குளத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டது. காலப்போக்கில், இரு குளங்களும் புதர் மண்டி, வறண்டு போயின. 'இந்த இரண்டு குளங்களையும் புதுப்பிக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதன்படி, ஐயன் குளம், சாமந்தான் குளம் ஆகியவை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 10.25 கோடி ரூபாய் செலவில், சீரமைக்கப்பட்டன. குளத்தை சுற்றிலும் ஓவியங்கள் வரையப்பட்டு, குளங்கள் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. இரு குளங்களையும், கடந்த, 23ம் தேதி முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
வாசகர் கருத்து