பொது பிப்ரவரி 27,2021 | 21:25 IST
உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மதமாற்றம் செய்வது அதிகளவில் நடக்கிறது. அதை கட்டுப்படுத்த, 10 ஆண்டு சிறைத்தண்டனையுடன் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை யோகி ஆதித்யநாத் கொண்டு வந்தார். ஆனாலும் லவ் ஜிஹாத் தொடர்கிறது. ஆக்ராவில் உள்ள தாயல்பாக் Dayalbagh பகுதியைச் சேர்ந்த 17 வயது இந்துப் பெண், 9ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் அப்பா ஆக்ராவில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். அதே ஓட்டலில் வேலை பார்த்த மெஹ்தாப் ராணாவுக்கு திருமணமாகி 6 குழந்தைகள் உள்ளன. மாணவியின் தந்தையை பார்க்க மெஹ்தாப் அடிக்கடி வீட்டுக்கு வந்தார். அப்போது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், உறவுக்கார பெண்ணுடன் மாணவி மருத்துவமனைக்கு சென்றார். மருந்து வாங்கி வருவதாக கூறிச் சென்ற மாணவியை மெஹ்தாப் சாமர்த்தியமாக கடத்திச்சென்றான். பேண்ட், டீஷர்ட் அணிந்திருந்த மாணவிக்கு பர்தா அணிவித்து தன்னுடன் கூட்டிச் சென்றுள்ளான், மெஹ்தாப். நீண்ட நேரம் காத்திருந்தும் இளம்பெண் வராததால் உறவுக்கார பெண் அதிர்ச்சியடைந்தார். குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர். மருத்துவமனையில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்த்தபோது மாணவியை மெஹ்தாப் கடத்திச் செல்வது உறுதியானது. மாணவியை மெஹ்தாப் கடத்துவது இது முதல்முறையல்ல. 3வது முறை. 2018ல் முதல்முறையாக மாணவியை கூட்டிக்கொண்டு, சொந்த ஊரான மீரட்டுக்கு மெஹ்தாப் ஓட்டம் பிடித்தான். அப்போது, மெஹ்தாப்பின் சகோதரனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். பயந்துபோன குடும்பத்தினர் மாணவியை போலீசில் தாங்களே கொண்டு வந்து ஒப்படைத்தனர். சில மாதங்ககள் கழித்து மீண்டும் மாணவியை மெஹ்தாப் கடத்தினான். இப்போது, 3வது முறை. மாணவி கடத்தப்பட்டு 3 நாளாகியும் மெஹ்தாப்பை போலீசார் கைது செய்யவில்லை; மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். மாணவி கடத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதும் போலீசுக்கு எதிராக கண்டனக் கணைகள் கிளம்பின. மெஹ்தாப்பின் மனைவி மற்றும் சகோதரர்கள், 2 மைத்துனிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது, லவ் ஜிஹாத்தான். மகளை மதமாற்றம் செய்யவே மெஹ்தாப்பும் குடும்பத்தினரும் கடத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோருகின்றனர். மாணவி கடத்தல் வீடியோ உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:
".........3வது முறை. 2018ல் முதல்முறையாக மாணவியை கூட்டிக்கொண்டு, சொந்த ஊரான மீரட்டுக்கு மெஹ்தாப் ஓட்டம் பிடித்தான். அப்போது, மெஹ்தாப்பின் சகோதரனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். பயந்துபோன குடும்பத்தினர் மாணவியை போலீசில் தாங்களே கொண்டு வந்து ஒப்படைத்தனர். சில மாதங்கள் கழித்து மீண்டும் மாணவியை மெஹ்தாப் கடத்தினான். இப்போது, 3வது முறை. மாணவி கடத்தப்பட்டு 3 நாளாகியும் மெஹ்தாப்பை போலீசார் கைது செய்யவில்லை..........." 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகும் இந்த நாயை வீட்டுக்கு அழைத்து வந்த அந்த பெண்ணின் அப்பாவை செருப்பால் அடித்தே கொல்ல வேண்டும்.