அரசியல் பிப்ரவரி 28,2021 | 09:20 IST
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களை ஒருங்கிணைத்து, தே.மு.தி.க., மண்டல தேர்தல் பொறுப்பாளராக, கட்சியின் துணை செயலர் சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டந்தோறும் சென்று, கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்துக்கு 200 க்கு மேற்பட்ட கார் அணிவகுப்பில் அவரை அழைத்து வந்தனர். ஆலோசனையில் நிர்வாகிகள் மற்றும் குறிப்பிட்ட தொண்டர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். நிருபர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனாலும்... தகவல் கசிவுக்கு குறை இல்லை. முன்னாள் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், 'இந்த கூட்டத்தை பார்த்து, பா.ம.க.,வினர் பீதி அடைந்துள்ளனர்' என்றார். சுதீஷ் அதை ஆமோதித்தார். '2019 தேர்தலில், சேலத்தில் நான் போட்டியிட்டபோது, தேர்தல் செலவுக்கு, பா.ம.க.,வினருக்கு நிறைய பணம் கொடுத்தோம். அவர்கள் வேலையும் செய்யவில்லை. பணத்தையும் செலவு செய்யவில்லை. கார் வாங்கி வசதியான வாழ்க்கைக்கு போய் விட்டனர். நமக்கு எதிராக செயல்பட்டனர். அதுவரை, நமக்கு அரசியல் அனுபவம் போதாது. இப்ப... நன்றாக கற்று கொண்டோம். நாம் யார் என்பதை அவர்களுக்கு காட்டுவோம்' என்றார். கைதட்டலுக்கு பஞ்சமில்ல....
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: