Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 28-02-2021 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் பிப்ரவரி 28,2021 | 13:00 IST

Share

கல்வி மற்றும் அரசு பணிகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா வெள்ளியன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க இம்மசோதா வகை செய்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7 சதவீதமும், எஞ்சிய சாதியினருக்கு 2.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப்படும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத ஒதுக்கீடு சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X