Advertisement

காங்கிரஸ் காணாமல் போகும்: அமி்த்ஷா

அரசியல் பிப்ரவரி 28,2021 | 15:00 IST

Share

காரைக்காலில் பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். புதுச்சேரியில் மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தும் காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்றார். தகுதி உடையவர்களுக்கு காங்கிரஸில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதனால், நாடு முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜவில் இணைந்து வருகின்றனர். புதுச்சேரிக்கு 15 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு திட்டங்கள் கொடுத்தது. முதல்வராக இருந்த நாராயணசாமி, அதனை முறையாக பயன்படுத்தவில்லை. கட்சியையும், ஊழலையும் வளர்ப்பதில் மட்டுமே அவர் அக்கறை காட்டினார். முதல்வராக இருந்த நாராயணசாமி சிறந்த பொய்யர். அவரது கட்சி தலைவரிடமே பொய் சொல்கிறார். மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் இருப்பதே தெரியாமல் பேசுகிறார் ராகுல். இப்படிப்பட்ட தலைவர்கள் தேவைதானா? என்று அமித்ஷா கேள்வி எழுப்பினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X