பொது மார்ச் 03,2021 | 19:40 IST
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம். 'டுவிட்டரில்' 4.08 கோடி ரசிகர்கள் பின்பற்றுகின்றனர். தற்போது 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் கோஹ்லியை பின்பற்றும் ரசிகர்கள் எண்ணிக்கை 10.3 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த இலக்கை அடைந்த முதல் இந்தியர், முதல் ஆசியர், முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெறுகிறார். கதவிர உலகளவில் போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி, பிரேசிலின் நெய்மருக்கு அடுத்த அதிக 'இன்ஸ்டாகிராம்' ரசிகர்கள் கொண்ட விளையாட்டு நட்சத்திரம் ஆனார் கோஹ்லி
வாசகர் கருத்து