அரசியல் மார்ச் 04,2021 | 08:52 IST
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்களுக்கும், சீர்மரபினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. சீர்மரபினராக இருக்கும் தென் நாடு மக்கள் கட்சியின் தலைவர் கணேசத் தேவர், இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இதுபற்றி அவர் பேசினார். எடப்பாடியிலும், குமாரபாளையத்திலும் வன்னியர்கள் அதிகம். அவர்கள் ஓட்டு கிடைத்தால்தான் தாம் ஜெயிக்க முடியும் என்று முதல்வர் பழனிசாமியும், அமைச்சர் தங்கமணியும் நினைக்கிறார்கள். எனவே பாமக கோரிக்கையை ஏற்று, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்துள்ளனர். தேர்தல் அறிவிப்பு வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன், அவசரமாக அதற்கான மசோதாவை தாக்கல் செய்து, அதைவிட அவசரமாக நிறைவேற்றி உள்ளனர். இது ஏமாற்று வேலை என்கிறோர் கணேச தேவர்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: