பொது மார்ச் 04,2021 | 18:49 IST
தினமலர் முன்னாள் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர் ஸ்ரீ இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜிகேவாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் இரா.கிருஷ்ணமூர்த்தி உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் செம்மொழி தகுதியை பெறவும், கணினி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் மேற்கொண்டதிலும் இரா கிருஷ்ணமூர்த்தியின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது என தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
வாசகர் கருத்து