Advertisement

பனியன் துணி பஞ்சாக்கும் ஆலையில் திடீர் தீ விபத்து ரூ.15 லட்சம் நாசம்

சம்பவம் மார்ச் 06,2021 | 14:32 IST

Share

திருப்பூரை சேர்ந்த இஸ்மாயில்என்பவர், அவிநாசியை அடுத்து வேலாயுதம்பாளையம் பகுதியில் பனியன் துணி அரைத்து பஞ்சாக்கும் ஆலையை சொந்தமாக நடத்தி வருகிறார். இங்கு 40-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திடீரென ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே மளமளவென ஆலை முழுவதும் தீ பரவியது. சுதாரித்துக்கொண்ட பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்து அவிநாசி மற்றும் திருப்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் வாகனங்கள் மூலம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X