Advertisement

கமிஷன் ஆட்சி என்று சாடிய மோடி

அரசியல் மார்ச் 07,2021 | 18:00 IST

Share

மேற்கு வங்கம், கொல்கத்தாவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மேற்கு வங்கம், வளர்ச்சி பெற வேண்டும் என்றுதான் மக்கள் மம்தாவை நம்பினர். ஆனால், மம்தா மக்களை ஏமாற்றி, முதுகில் குத்திவிட்டார். மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டனர். கமிஷன் அரசு நடத்தி வருகிறார். அமைதி மற்றும் வளர்ச்சியைதான் மேற்கு வங்கம் விரும்புகிறது. பாஜகவும், சிறந்த நிர்வாகமும்தான் இப்போது இந்த மாநிலத்திற்கு தேவை. இதற்கு முன்பு எந்த அரசும் செய்யாததை நாங்கள் செய்து முடிப்போம். சட்டமன்ற தேர்தலில் ஒருபுறம் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகியோர் உள்ளனர். அவர்கள் மாநில வளர்ச்சிக்கு எதிரானவர்கள். மேற்கு வங்கத்தின் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம். வளர்ச்சி, முதலீடு அதிகரிப்பு, கலாச்சார பாதுகாப்பு மற்றும் மாற்றத்தை கொண்டுவருவோம். அடுத்த 5 ஆண்டு வளர்ச்சி அதற்கடுத்த 25 ஆண்டுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்று பிரதமர் மோடி பேசினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X