Advertisement

தொற்று அதிகரிப்பதால் நடவடிக்கை

பொது மார்ச் 07,2021 | 18:54 IST

Share

ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியை தவிர, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தலையெடுக்க தொடங்கியிருப்பதால், கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியாக, 3 நாட்களுக்குள் தமிழகம் வந்து செல்வோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் தொற்று பரவல் அதிகம் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. தினமும், புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 85 சதவீதத்தை, இந்த 6 மாநிலங்கள் கொண்டுள்ளதாம்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Mani . V
Mani . V , சிங்கப்பூர். 08-மார்-2021 | 04:48:00 IST Report Abuse

ஆனால், தேர்தல் பரப்புரைக்கு ஆட்டு மந்தை போல் கூடுவதற்கு தடையே இல்லை. (தேர்தலுக்கு பின் யார் செத்தொழிந்தால் எங்களுக்கு என்ன?)

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X