Advertisement

சிதம்பரத்தில் வினோத சம்பவம்

பொது மார்ச் 07,2021 | 21:28 IST

Share

சிதம்பரம் நேரு நகரில் ஒரு காளை மாடு வாயில் தகர டப்பாவுடன் சுற்றித் திரிந்தது. வாயில் ரத்தமும் சிந்தியது. யாரோ தகர டப்பாவில் சாப்பாடு வைத்துள்ளனர். அதைச் சாப்பிட மாடு வாயை விட்டுள்ளது. தகர டப்பாவாச்சே.. வாயைக் கிழி்த்து விட்டது. அத்தோடு சோகம் தீரவில்லை. வாயிலேயே டப்பா மாட்டிக்கொண்டது. பலமாக தலையை ஆட்டியபோதும் டப்பா விழுவதாக இல்லை. வாய் கிழிந்ததால் ரத்தம் வழிந்தது. வலியோடு சுற்றி வந்த மாட்டுக்கு உதவ நேருநகர் மக்கள் முன்வந்தனர். மாட்டை நாலாபுறமும் கயிற்றால் கட்டி இழுத்து ஒரு இடத்தில் படுக்க வைத்தனர். நம்மை ஏதோ செய்யப்போகிறார்கள் என மாடு திமிறியது. மக்கள் விடவில்லை. வாயில் மாட்டியிருந்த டப்பாவை பக்குவமாக அகற்றி வலியிலிருந்து விடுதலை கொடுத்தனர். அதன்பிறகு மாட்டின் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். டப்பா மாட்டியிருந்ததால் 2 நாளாக தண்ணீர் கூட குடித்திருக்காது என நினைத்த ஒருவர் பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார். அதனுள் வாயை விட்டு குடித்த மாட்டின் மனதில் ஃபிளாஸ்பேக் ஓடியது. மறுபடியும் டப்பாவா? என நினைத்த மாடு, போங்கடா... நீங்களும் உங்க தண்ணியும் என முட்டித் தள்ளி விட்டு அங்கிருந்து ஓடிப் போனது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X