Advertisement

சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும்

அரசியல் மார்ச் 08,2021 | 08:50 IST

Share

தேர்தல் நேரத்தில், வாக்காளர்களுக்கு, பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். இதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினரோடு இணைந்து, போலீசார் ரோந்து சென்று, ஆவணமின்றி பணம், பொருட்கள் எடுத்து செல்பவர்களிடம் பறிமுதல் செய்கின்றனர். இதுதவிர, வேலுார் மாவட்டத்தில், தமிழக - ஆந்திர எல்லை பகுதிகளிலும், தினமும் எட்டு மணி நேரம் சுழற்சி முறையில், துப்பாக்கி ஏந்திய, மூன்று போலீஸ் குழுவினர் ரோந்து சுற்றி வருகின்றனர். அதை உயர் போலீஸ் அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். ஆனால், சில போலீசார் மட்டும், தனியாக ரோந்து செல்வதாக புகார்கள் சென்றன. கடுப்பான அதிகாரிகள், ‛தனியாக ரோந்து செல்லும் போலீசார் மீது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை பாயும்' என, எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'சட்ட விரோத செயல்களுக்கு துணை போவதை தடுக்கவும், பாதுகாப்பு கருதியும், இரவில், எஸ்.ஐ., - போலீசார் தனியாக ரோந்து செல்லக்கூடாது என்ற விதியுள்ளது. ஒரு சிலர் தனியாக ரோந்து செல்வதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்கின்றனர், போலீஸ் அதிகாரிகள்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X