Advertisement

போராட்டத்தில் பெண்கள் குவிந்தனர்

பொது மார்ச் 08,2021 | 20:56 IST

Share

டில்லியில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டக் களம், மகளிர் தினத்தை முன்னிட்டு, நேற்று பெண் விவசாயிகளுக்கான தளமாக மாறியது. 'மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்' என, பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டில்லியின் நுழைவு பகுதியில், 100 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, போராட்டக் களத்தில் பெண்கள் குவிந்தனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி நடத்திய அவர்கள், பின் மேடையேறி, விவசாயம், அதில் பெண்களின் பங்கு, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விரிவாக பேசினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X