Advertisement

ஒவ்வொருவரும் வேட்பாளர் தான்....

அரசியல் மார்ச் 09,2021 | 06:20 IST

Share

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று முன்தினம் நாகர்கோவில் வருகிறார் என்றதும், குமரி மாவட்ட பா.ஜ.,வினர் உஷாராகினர். வழி நெடுகிலும், குருத்தோலை தோரணம், அடுக்கடுக்கு வாழைக்குலை, பூ அலங்காரம், கேரள செண்டைமேளம், தையம், கும்பாட்டம், கரகாட்டம், ரோடு தெரியாத அளவுக்கு, ஏழு டன் பூ விரிப்பு என, வரவேற்பை அமர்களப்படுத்தினர். சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலுக்கு சென்றார், அமித்ஷா. வெளியே வந்தவர், 'தேர்தலுக்கு பின், தமிழகத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., கூட்டணி ஆட்சி அமைக்கும்' என்றார். நாகர்கோவில் அருகே, நீலவேணி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின், ‛ரோடு ஷோ'வை செட்டிகுளத்தில் தொடங்கினார். பூக்களால் அலங்கரித்த லாரியில் , சிரித்த முகத்துடன் கையசைத்தும், கை கூப்பியும் , சால்வைகளை, மக்கள் மத்தியில் வீசியும் சென்றார். ஒரு கிலோ மீட்டர் துாரத்தை கடக்க, ஒரு மணி நேரம் ஆனது. பின்னர், நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமித் ஷா, 'தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா மாநிலங்களில், நிச்சயமாக ஆட்சி அமைப்போம். மேற்கு வங்கத்தில், 200க்கு குறையாத தொகுதிகளில் வெற்றி பெறுவோம்' என்று கூறி, உற்சாகமூட்டினார். 'பொன் ராதாகிருஷ்ணன் மட்டும் வேட்பாளர் அல்ல; நீங்கள் ஒவ்வொருவரும் வேட்பாளர் என நினைத்து, தேர்தல் வேலை செய்யுங்கள்' என, நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டார். அரை நாள்தான் பயணம் செய்தார். ஆனாலும், பா.ஜ., நிர்வாகிகளை அலற வைத்து விட்டார் அமித்ஷா. பொன். ராதாகிருஷ்ணன் கையை பிடித்து அழைத்து சென்றும், வீடுகளில் ஓட்டு கேட்டார். தொண்டர்கள் மத்தியில் பேசவில்லை என்ற குறையை தவிர, வேறு எல்லாம் நன்றாக நடந்த திருப்தியில், பா.ஜ., வினர் உள்ளனர்.    அமித்ஷா எங்கு சென்றாலும், அங்கு வெற்றி என்பது பா.ஜ,வினர் நம்பிக்கை. அந்த வகையில், குமரியில் மீண்டும் தாமரை மலர அமித்ஷாவின் அரை நாள் பயணம் உதவுமா என்பது தெரிய, 2 மாதம் காத்திருக்க வேண்டும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X