Advertisement

தேர்தல் களத்தில் கலகலப்பு

அரசியல் மார்ச் 09,2021 | 10:22 IST

Share

இல்லத்தரசிகளுக்கு சம்பளம் தருவோம் என்று முதல் பந்திலேயே சிக்சர் அடித்த கமலின் அறிவிப்பை கேட்ட திராவிட கட்சியினருக்கு 'வடை போச்சே' என்ற டயலாக்கை தான் பேசத் தோன்றியிருக்கும். அரசியலில் எவரும் நிரந்தர எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல என்ற கோட்பாட்டின் படி, ஒரு கட்சியின் அறிவிப்பை மற்ற கட்சியினர் சுட்டால் தப்பில்லை என்றாகி விட்டது. ஏற்கனவே சமூக ஊடகங்களில் 'சுடல' என, பெயர் எடுத்த ஸ்டாலின், இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை என்ற கமலின் அறிவிப்பை சுட்டு விட்டார் என்கின்றனர் மக்கள் நீதி மய்யம் கட்சியினர். ஸ்டாலின் தான் வர்றாரு; விடியல் தரப்போறாரு என்ற தேர்தல் வாசகத்தை, ஸ்டாலின் தான் வர்றாரு; காப்பி அடிக்க போறாரு என்று மாற்றி திமுகவை கமல் கட்சியினர் கிண்டலடித்து வருகின்றனர். எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பிரதியெடுத்து கொண்ட கழகம், எங்கள் நேர்மையையும், துாய்மையையும் பின்பற்றினால் மகிழ்வேன் என்று கமலும் கூறியுள்ளார். சுட்டார், சுட்டார் என்று கமல் டீமும், சுடல, சுடல என்று ஸ்டாலின் டீமும் மல்லுக்கட்டுவது தேர்தல் களதை கலகலப்பாக்கி இருக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X