Advertisement

இருந்த பதவியையும் ராஜினாமா செய்தார்

அரசியல் மார்ச் 12,2021 | 08:35 IST

Share

திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட, முன்னாள் எம்.பி., சுந்தரம், 'சீட்' கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதற்காக, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். துணை முதல்வர், ஓ.பி.எஸ்., ஆதரவாளரான இவர், தொகுதியை எப்படியும் கைப்பற்றி விடலாம் என்ற கனவில் இருந்தார்; அதற்கு, பெரும் இடி விழுந்துள்ளது. ‛சிட்டிங்' எம்.எல்.ஏ., பொன் சரஸ்வதிக்கே மீண்டும்,‛ சீட்' தரப்பட்டுள்ளது. இ.பி.எஸ்.,பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகளுக்கு, ‛சீட்' ஒதுக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்., ஆதரவாளரான சுந்தரம், எப்படி இருந்தாலும், அவர் பக்கம் சாய்ந்து விடுவார் என்பதும், கட்சி தலைமையின் சந்தேகம். அதனால், 'கல்தா' லிஸ்டில் சேர்ந்துள்ளார். 'சீட்' கிடைக்கும் நம்பிக்கையில், நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் பதவியை இழந்து, மாவட்ட அவைத்தலைவர் பதவியை மட்டும் வைத்துள்ள சுந்தரம், 'உள்ளதும் போச்சே...' என்று, நொந்து போயிருக்கிறார். அவரின் ஆதரவாளர்களோ, 60:40 கணக்கில் அண்ணன், 'அவுட்' ஆகிட்டாரோ என, கிண்டலடிக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X