Advertisement

அரசு ஊழியர்கள் ஆசை

அரசியல் மார்ச் 18,2021 | 10:05 IST

Share

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 'வாட்ஸ் - ஆப்' குழுக்கள் ஏற்படுத்தி, 'அ.தி.மு.க.,வின், 10 ஆண்டு ஆட்சியில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், தி.மு.க., ஆட்சி அமைந்தால் கிடைக்கக்கூடிய பலன்கள்' குறித்து , தினமும் சூடான விவாதம் நடத்துகின்றனர். ‛பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் உறுதிமொழியை, 2011 மற்றும், 2016 தேர்தல்களின் போது, ஜெ., கொடுத்தார். ஊதிய முரண்பாடுகள் களைய கமிஷனும் அமைத்தார். ஆனால், நடவடிக்கை இல்லை. அடுத்து வந்த, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,ம் கண்டு கொள்ளவில்லை' என்பது பொதுவான புகாராக உள்ளது. ‛நாங்கள், 13 லட்சம் பேர் இருக்கிறோம். ஒரு குடும்பத்தில், 'ஒன் பிளஸ் 3' என, நான்கு ஓட்டு வீதம் , 50 லட்சத்துக்கு மேலான ஓட்டுகள் உள்ளன. உறவினர் ஓட்டுகளும் உள்ளன. எங்கள் முடிவை தேர்தல் நேரத்தில் எடுப்போம். அதற்காக இப்போது இருந்தே கருத்து பரிமாற்றம் செய்து வருகிறோம்' என , ஒரு குழுவின்,‛ அட்மின்' விவரித்தார். மற்றொரு,‛ அட்மின்' ‛ஓப்பனாகவே', “ஆறு லட்சம் பேர் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளோம். பொதுமக்களுக்கு எப்படியோ, தெரியாது; எங்களுக்கு தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை நம்பிக்கை தருகிறது. நாங்கள் விரும்பும் கட்சியை ஆட்சியில் அமர வைப்போம்' என்றனர். ‛தி.மு.க., ஆட்சியில் தான், அரசு ஊழியர்களுக்கு அடிக்கடி சம்பள உயர்வும், சலுகைகளும் கிடைக்கும்; விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய கெடுபிடிகள் இருக்காது. எதற்கெடுத்தாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்' என்று பரவலாக ஒரு நம்பிக்கை, எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே தொடர்கிறது. எனினும், ‛அ.தி.மு.க., ஆட்சியில் தான், குறிப்பாக, ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு, அரசியல் தலையீடுகள் எல்லாமல் சுதந்திரமாக செயல்பட முடிகிறது' என, அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X