Advertisement

பாஜ வேட்பாளர் வானதி அறிவிப்பு

அரசியல் மார்ச் 24,2021 | 15:26 IST

Share

தேசிய கட்சியான பாஜக, திராவிட கட்சிகளை போல, இலவசங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது. ஆனால், 'இலவசத்துக்கு பழகிப்போன' தமிழகத்தில் காலுான்ற வேண்டும் என்பதால், பாஜ தேர்தல் அறிக்கையிலும் சில இலவசங்கள் இடம் பிடித்துள்ளன. 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா 'டேப்லெட்', 18 முதல், 23 வயது வரை உள்ள இளம்பெண்களுக்கு, இலவச டிரைவிங் லைசன்ஸ், மீனவர்களுக்கு ஆண்டுதோறும், 6,000 ரூபாய் நிதி என, சில அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கோவை தெற்கில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன், 'சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், விலையில்லா, 'இண்டக் ஷன் ஸ்டவ்' இலவசமாக இல்லத்தரசிகளுக்கு வழங்குவேன்' என்று, அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, கோவை தெற்கு தொகுதியில் தீயாய் பரவியது. எங்கு பார்த்தாலும் பெண்கள் இதைத்தான் விவாதிக்கின்றனர். அத்தனை பேருக்கும், இண்டக்ஷன் ஸ்டவ் கொடுப்பது சாத்தியமா? என வானதியிடம் கேட்டோம். என் தொகுதி பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால், அறிவித்து இருக்கிறேன். இன்னும் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறேன் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X