Advertisement

சுகாதாரத்துறை அதிருப்தி

பொது மார்ச் 24,2021 | 18:30 IST

Share

கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக சார்பில், அக்கட்சியின் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா போட்டியிடுகிறார். கடந்த 18 ம் தேதி மனு தாக்கல் செய்த அவர், பின்னர், புறவழிச்சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அவருடன், சுதீஷ், அவரது மனைவி தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், சுதீசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சுதீஷ் மனைவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, விடுதியில் அவர் தனிமைபடுத்தி கொண்டுள்ளார். இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பிரேமலதாவும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அவரிடம் வலியுறுத்தியது. ஆனால், அவர் அலட்சியப்படுத்தி தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரேமலதாவுக்கு கொரோனா உள்ளதா இல்லையா என உறுதியாகாத நிலையில், அவருடன் 100 பேர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X