Advertisement

பிரதமர் மோடி உட்பட பலர் பாராட்டு

அரசியல் மார்ச் 25,2021 | 19:29 IST

Share

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ. வேட்பாளராகப் போட்டியிடும் வீட்டு வேலை செய்யும் பெண், பலரது கவனத்தைக் ஈர்த்துள்ளார். கலிதா மாஜி என்ற அந்த பெண்ணின் வயது 32. நான்கு வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து, மாதம் ரூ.2,500 மட்டுமே சம்பாதிக்கிறார். இவரது கணவர் குழாய் ரிப்பேர் செய்பவர். ஒரே மகன், 8-ம் வகுப்பு படிக்கிறான். கணவர், குழந்தையுடன் குடிசையில் வாழும் கலிதா மாஜிக்கு அரசியல் ஆர்வம் அதிகம். 2018-ம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார். கலிதா மாஜியின் அரசியல் ஆர்வத்தை அறிந்த பா.ஜனதா கட்சி, இவருக்கு இந்த சட்டசபை தேர்தலில் புர்பா பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஆஸ்கிராம் தொகுதியில் போட்டியிட சீட் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து, வீட்டு வேலைக்கு ஒரு மாத விடுப்பு' எடுத்துக்கொண்டு, தேர்தல் களத்தில் சூறாவளியாய் சுழன்று வரும் கலிதா மாஜி. தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் ஆஸ்கிராம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருப்பவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபேதானந்ததாண்டர். கலிதா மாஜியின் தொகுதிக்கு, ஏப்ரல் 26-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் திருவிழாவில் உற்சாகமாகப் பங்கேற்றுள்ள கலிதா மாஜியை பிரதமர் மோடி உட்பட பலர் பாராட்டி வருகின்றனர். பிரதமர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள , 'சுய கவுரவத்தோடு உழைத்து வாழும் கலிதாஜி, சேவையாற்றும் தனது உறுதியால் சமூகத்துக்கு ஒரு புதிய நம்பிக்கையாக உருவாகியுள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Mani . V
Mani . V , சிங்கப்பூர். 26-மார்-2021 | 06:49:37 IST Report Abuse

அட, போங்க பாஸ், அங்கு வேலைக்காரப்பெண் வேட்பாளர். தமிழகத்தில் வேட்பாளர்கள் வேலைக்காரர்கள். ஒருவர் துணி துவைப்பார், ஒருவர் மாவு ஆட்டுவார், ஒருவர் டீ ஆத்துவார்,.........

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X