Advertisement

டில்லிவரை போன புகார்

அரசியல் மார்ச் 26,2021 | 09:15 IST

Share

அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றால், அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டு உள்ளது என்பதை பார்த்துதான் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கிறது. அதனால் தேடிப் பிடித்து விபரங்களை சேகரித்த திமுக குழு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் மனுக்களாக கொடுத்திருக்கிறது. அவற்றை விசாரித்து சிலரை மாற்றம் செய்தார் அவர். மீண்டும் ஒரு புகார் பட்டியல் தயாரித்து, டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையாளரிடம் கொடுத்திருக்கிறார் திமுக ராஜ்யசபா எம்பி நெல்சன். அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் அதீத அழுத்தம் கொடுத்து, அவர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட விடாமல் தடுக்க திமுக பெரும்பாடு படுகிறது. இதற்காகவே நுாற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், 234 தொகுதிகளுக்கும் அக்கட்சியால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

JAYACHANDRAN RAMAKRISHNAN
JAYACHANDRAN RAMAKRISHNAN , இந்தியா. 26-மார்-2021 | 10:02:41 IST Report Abuse

இது நம்பத்தகுந்தது போல் இல்லை. திமுகவினற்கு தான் 50% மேல் அரசு அதிகாரிகள் ஆதரவு எப்போதும் உண்டு. மேலும் 70 முதல் 80 சதவிகித அரசு ஆசிரியர்கள் ஆதரவு என்றும் உண்டு. ஏனெனில் திமுக ஆட்சிக்கு வந்தால் இவர்கள் எல்லோரும் ஜாலியாக இருக்கலாம். யாரும் இவர்களை எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள். ஆகவே திமுகவிற்கு எதிரான அரசு உயர் அதிகாரிகளை மாற்ற திமுக முயற்சிக்கும் இதுதான் 1967 முதல் நடக்கும் நிகழ்வு. இதனையும் மீறிதான் மற்ற கட்சிகளின் வெற்றி உள்ளது.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X