Advertisement

கோவை தெற்கு தொகுதி | Kovai South Constituency Roundup

சிறப்பு தொகுப்புகள் ஏப்ரல் 01,2021 | 16:43 IST

Share

கோவை மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது கோவை தெற்கு தொகுதி. 2007ல் தொகுதி மறு சீரமைப்பின்போது உருவாக்கப்பட்டது. பழமையான கோனியம்மன், தண்டுமாரியம்மன் கோயில்கள், விக்டோரியா ஹால் இத்தொகுதியின் அடையாளம். டவுன் ஹால், உக்கடம், காந்திபுரம், ரேஸ்கோர்ஸ் போன்ற கோவையின் இதய பகுதிகள் இத்தொகுதியில் வருகிறது. ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட்கள் என பல தொழில்கள் நிறைந்த தொகுதி. கலெக்டர் அலுவலகம், கோர்ட், அரசு மருத்துவமனை, மத்திய சிறை, கமிஷனர் அலுவலகம், வஉசி பூங்கா, ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் இத்தொகுதியில் அடக்கம். விஸ்வகர்மா, செட்டியார் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். கவுண்டர், தேவர், ஜெயின், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் மொத்தம் 2.51 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1.25 லட்சம் பேர். பெண்கள் 1.25 லட்சம் பேர் உள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X