Advertisement

மீனவர்களை மூளை சலவை செய்யும் கட்சிகள் | Kattupalli Port extension | Uses Explained

சிறப்பு தொகுப்புகள் ஏப்ரல் 02,2021 | 12:42 IST

Share

காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் ! பயன்கள் என்ன ? பொன்னேரி சரத் வரலாற்று ஆய்வாளர்


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

JAYACHANDRAN RAMAKRISHNAN
JAYACHANDRAN RAMAKRISHNAN , இந்தியா. 02-ஏப்-2021 | 15:27:24 IST Report Abuse

இவர் கூறுவது வார்த்தைக்கு வார்த்தை முற்றிலும் உண்மை. 2000 த்தில் கோவை சிறுமுகை கிராமத்தில் இயங்கி கொண்டு இருந்த செளத் இண்டியா விஸ்கோஸ் தொழிற்சாலையை இவர் கூறியது போல் பவானி அணையில் மீன் பிடித்து கொண்டு இருந்தவர்களையும் விவசாயிகளையும் கொண்டு மூட வைத்து விட்டார்கள் எதற்கு தெரியுமா அப்போது நடந்த ஒரு தேர்தலுக்கு ஆதிமுகவிற்கும் திமுகவிற்கும் ஒரே அளவில் தேர்தல் நிதி அளித்தற்காக. திமுக வினர் நாங்கள் தான் ஆளுங்கட்சியாக வரப்போகுகிறோம் எங்களுக்கும் அவர்களுக்கும் ஒரே தொகையா? நாங்கள் தொழிற்சாலையை மூடிக்காட்டுகிறோம் சூளுரைத்து மூடி அத்தொழிலகத்தில் இருந்த பொருட்களையெல்லாம் கூட்டணி அமைத்து கொள்ளையடித்து சென்று விட்டனர். அத்தொழிற்சாலையை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தி வேடிக்கை பார்த்தவர்கள் தான் திமுகவினர். அது மட்டுமா இத்தொழிற்சாலையை நம்பி இயங்கிக் கொண்டு இருந்த பல பஞ்சாலைகளும் முடப்பட்டன. அங்கிருந்தவர்களும் வேலை வாய்ப்பு இழந்தனர். வேலை இழந்த இது போன்ற மூடப்பட்ட தொழிற்சாலைகளில் இருந்த தொழிலாளர்களை பற்றியோ அவர்களுடைய குடும்பத்தினைரை பற்றியோ இவர்கள் எதேனும் அக்கறை பட்டார்களா? அல்லது அவர்களுக்கு எதேனும் செய்தார்களா? இவர்கள் வேலை முடிந்ததும் 6 மாதமோ 1 வருடமோ விடுமுறை எடுத்துக்கொண்டு அடுத்து சைனாகாரனோ அல்லது வேற ஏதாவது நாட்டுகாரனோ ஏதாவது ஒரு தொழிற்சாலையை மூடச்சொன்னால் அங்கே சென்று விடுவார்கள். இவர்களது அடுத்த குறி திருப்பூர் பனியன் தொழில். சைனாகாரன் உத்தரவு போட்டுவிட்டான் போலும் இனி அங்கு எப்போது ஆரம்பிக்க போகிறார்களோ தெரியவில்லை. இவர்கள் உண்மையிலேயே நாட்டு மக்கள் மீது அக்கறையுள்ளவர்களாக இருந்தால், தொழிற்சாலைகளை மூடாமல் அதில் வரும் பாதிப்புகளை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து அவைகளை நீக்கி தொழிற்சாலைகளை இயங்க வைத்து வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும் அல்லவா. ஆனால் இவர்கள் அதுபோல் செய்ய மாட்டார்கள். இவர்களின் கைக்கூலிகளாக சில நீதிமன்றங்களும் இருக்கும். அவர்களும் இவர்களோடு சேர்த்து தொழிற்சாலைகளை மூடுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்வார்கள். அவர்கள் கூட இதுவரை இது போன்ற எந்த வழக்கிலும் மூடப்பட்ட தொழிற்சாலையில் பனியாற்றிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதே. அதற்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டதே இல்லை. இதுதான் இந்த நாட்டின் உச்ச பட்ச அவல வலை. இனிமேலாவது இதுபோன்று தொழிற்சாலைகளை மூடும் முன்பு அத்தொழிலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடாமல் மாற்று ஏற்பாடு செய்து விட்டு தொழிற்சாலையை மூட வேண்டும் என நீதிமன்றங்களையும் அரசையும் வெளிநாட்டு கைகூலிகளையும் அன்புடன் சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X