Advertisement

சோதனை எவரையுமே விட்டு வைப்பது இல்லை

அரசியல் ஏப்ரல் 03,2021 | 09:53 IST

Share

பணக்கார திமுகவினரின் வீடுகளில், 'ரெய்டு' நடப்பதால், அக்கட்சியின் தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பத்தாண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும், தி.மு.க., வேட்பாளர்கள் காட்டில் பண மழை பொழிகிறது. எந்த தடையுமின்றி, அவர்களுக்கு தேர்தல் செலவுக்கு பணம் வந்து சேருகிறது. ஹவாலா எஜன்ட்கள் வாயிலாக, 'கேஷ் சப்ளை' நடப்பதாக, ஐ.டி.,க்கு முதல்கட்ட தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், 'மாஜி' அமைச்சரும், திருவண்ணாமலை வேட்பாளருமான எ.வ.வேலு வீடுகளில், 'ரெய்டு' நடத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து, வட மாவட்டங்களில், தி.மு.க.,வின் தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்களால், பணத்தை வெளியில் எடுக்க முடியவில்லை. அவர்களுக்கான பணத்தை பதுக்கி வைத்துள்ள, தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர்களும் கண்காணிக்கப்படுவதால், அவர்களாலும் உதவ முடியவில்லை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X