Advertisement

திருப்பூர் வடக்கு தொகுதி | Tiruppur North Roundup | Election 2021| Dinamalar

சிறப்பு தொகுப்புகள் ஏப்ரல் 04,2021 | 22:58 IST

Share

2011ல் தொகுதி மறு சீரமைப்பின்போது, திருப்பூர் வடக்கு தொகுதி உருவாக்கப்பட்டது. அனுப்பர்பாளையம், பெரியார் காலனி, காந்திநகர், குமார் நகர் பகுதிகளை கொண்டு பெரிய தொகுதி. மாநகராட்சியின் 29 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. பட்டம்பாளையம், பெருமாநல்லூர், காளிபாளையம், சொக்கனூர், வள்ளிபுரம் உள்ளிட்ட 10 ஊராட்சிகள் உள்ளன. பின்னலாடை, பாத்திரம் உற்பத்தி, சாலை சலவை ஆலைகள் இத்தொகுதியின் முக்கிய தொழில்கள். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினர் 34 சதவீதம் பேர் உள்ளனர். ஆதிதிராவிடர்கள் 16 சதவீதம், முதலியார் செட்டியார், முஸ்லிம்களும் கணிசமாக வசிக்கின்றனர். திருப்பூர் வடக்கு தொகுதியில், மொத்தம் 3.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண்கள் 1.91 லட்சம் பேர். பெண் வாக்காளர்கள் 1.84 லட்சம் பேர் உள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X