Advertisement

கொரோனா பரவல் ஏப்.,8ல் முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

பொது ஏப்ரல் 05,2021 | 19:15 IST

Share

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் மோடி, அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மை செயலர், சுகாதார செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், வரும் ஏப்ரல் 8-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது, கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஏப்.,6ல் ஆலோசனை நடத்துகிறார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X