Advertisement

வாக்காளர் 90 பதிவானது 181 ! 6 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'

பொது ஏப்ரல் 06,2021 | 00:00 IST

Share

அசாம் மாநிலத்தில், 90 வாக்காளர்கள் உள்ள ஓட்டுச் சாவடியில், 181 ஓட்டுக்கள் பதிவானது தொடர்பாக, தேர்தல் அதிகாரிகள் ஆறு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அசாமில், முதல்வர், சர்பானந்தா சோனாவால் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த, 1ம் தேதி இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவு நடந்தது. அதில், ஹப்லாங் தொகுதிக்கு உட்பட்ட, மொத்தம், 90 வாக்காளர்கள் உள்ள ஒரு துணை ஓட்டுச் சாவடியில், 181 ஓட்டுக்கள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. அப்போது, பிரதான ஓட்டுச் சாவடியைச் சேர்ந்த வாக்காளர்களை, துணை ஓட்டுச் சாவடியில் ஓட்டு போட, அதிகாரிகள் அனுமதித்தது தெரியவந்தது. ஓட்டுச் சாவடியின் தலைமை அதிகாரி உள்ளிட்ட ஆறு அதிகாரிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து விதிகளை மீறிய அதிகாரிகள் ஆறு பேரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X