Advertisement

சென்னை பல்கலையில் நாளை பட்டமளிப்பு விழா

பொது ஏப்ரல் 07,2021 | 18:51 IST

Share

சென்னை பல்கலையின், 163-வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் உள்ள நுாற்றாண்டு விழா அரங்கில் நாளை நடக்கிறது. பல்கலை வேந்தர், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் விழா நடக்கிறது. இதில், சிறப்பு விருந்தினராக, சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி பங்கேற்கிறார். கொரோனா பரவல் அதிகம் உள்ளதால், அதற்கான விதிகளை கடைப்பிடித்து, சமூக இடைவெளியுடன் விழா நடத்தப்படுகிறது. ஆராய்ச்சி படிப்பு முடித்தோரில், அதிக மதிப்பெண் பெற்ற சிலருக்கு மட்டுமே, மேடையில் பட்டம் வழங்கப்பட உள்ளது. பல்கலை துணைவேந்தர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதிவாளர் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X