பொது ஏப்ரல் 08,2021 | 21:40 IST
மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரான, நடிகர் கார்த்திக்கிற்கு, மார்ச், 21ல் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் தேறிய பின், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக, மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரசாரம் செய்தார். பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய கார்த்திக்கிற்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, இம்மாதம், 5ம்தேதி அடையாறு மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டாவது முறையாக நடந்த பரிசோதனையிலும், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும், மூச்சுத்திணறல் பிரச்னை சரியாகவில்லை. தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கார்த்திக்கிற்கு, டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
வாசகர் கருத்து