Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 10- 04-2021 | Cinema News Roundup | Dinamalar Video

சினிமா வீடியோ ஏப்ரல் 10,2021 | 07:25 IST

Share

தனுஷ் பட ஹீரோயினுக்குக் கொரோனா விஷால் நடித்த 'ஆக்ஷன்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்ய லட்சுமி. தனுஷ் உடன் 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கிறார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளார். இதுப்பற்றி, “கொரானோவால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளியை பார்க்கிறீர்கள். நானும் மாஸ்க் அணிந்தேன், சானிட்டைஸ் செய்து கொண்டேன், சமூக இடைவெளி கடைபிடித்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் நான் சோர்வாக இருப்பதை உணர்ந்தேன். அது எனது இயல்பு வாழ்க்கையை பாதித்தது. இருப்பினும் அதை எளிதாக எடுத்துக் கொண்டேன். நுரையீரல் வலுவடைய யோகா செய்கிறேன், மஞ்சள், ஆன்டிவைரல், மல்டிவிட்டமின்களை எடுத்துக் கொள்கிறேன். மாஸ்க் அணியுங்கள், நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள், ஆனால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்'' என தனது கொரோனா அனுபவத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X