Advertisement

தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் ஓட்டலில் தள்ளுபடி

பொது ஏப்ரல் 10,2021 | 17:50 IST

Share

புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்கவும், தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. முன்னதாக, ஓட்டல் சங்க நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் காண்பிப்பவர்களுக்கு, தள்ளுபடி அல்லது பரிசு வழங்க ஓட்டல்கள் சங்கம் முன் வரவேண்டும் என சுகாதாரத்துறை செயலர் அருண் கோரிக்கை விடுத்தார். இதையேற்று புதுச்சேரியில் உள்ள பிரபல ஓட்டல்களான அக்கார்டு, அண்ணாமலை, அதிதி, அசோக், ஜெயராமன், செண்பகா,  சன்வே, சற்குரு, ராம் இன்டர்நேஷ்னல், பிரோமனட், நல்லாம் பீச் ரெசார்ட்,   ராயல்பார்க் உட்பட 25 ஓட்டல்களில் உணவு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என புதுச்சேரி ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Visu Iyer
Visu Iyer , இந்தியா. 10-ஏப்-2021 | 20:39:59 IST Report Abuse

அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு என்ன தண்டனை...? தேர்தலில் பிரச்சாரம் செய்த கட்சிகளை தடை செய்யவேண்டாமா...? இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டாமா...? அதை செய்யாமல் மக்களை கட்டுப்படுத்துவது சுதந்திர நாட்டில் எப்படி சரியாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர போறாங்க...

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X