Advertisement

மேற்கு வங்கத்தில் அமித்ஷா உறுதி

அரசியல் ஏப்ரல் 11,2021 | 18:07 IST

Share

மேற்கு வங்கத்தில் 5ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்து வருகிறது. நாடியா மாவட்டத்தில் நடந்த பாஜக பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். பின்னர் பேசிய அவர், மேற்கு வங்கத்தில், பாஜக ஆட்சிக்கு வந்ததும், அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான வன்முறைகளுக்கு முடிவு கட்டுவோம் என்றார். 4ம் கட்ட தேர்தலில் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தவிர, மேற்கு வங்கத்தில் தேர்தல் அமைதியாக நடந்தது. 4 பேர் இறந்ததற்கு மட்டும் மம்தா இரங்கல் தெரிவித்தார். ஐந்தாவதாக இறந்த ஆனந்த் பர்மன், ராஜ்வன்ஷி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்காக மம்தா இரங்கல் தெரிவிக்கவில்லை. தாம் பேசியதற்காக, மேற்கு வங்க மக்களிடம் மன்னிப்பு கேட்க மம்தாவுக்கு இன்னும் நேரம் உள்ளது. மத்திய படையினரை முற்றுகையிடுமாறு மம்தா கூறியதுதான், மத்திய தொழிற்படையினர் மீதான தாக்குதலுக்கு காரணம். உயிரிழப்புகளை அரசியலாக்கும் முயற்சிகள் நடக்கிறது. ஜனநாயக திருவிழாவை அமைதியாக மக்கள் கொண்டாட வேண்டும் என்று அமித்ஷா கூறினார்.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Mani . V
Mani . V , சிங்கப்பூர். 12-ஏப்-2021 | 06:40:17 IST Report Abuse

வன்முறை எங்கள் கட்சிக்கு மட்டுமே உரிமையானது. அதனால் மற்றவர்கள் வன்முறை செய்ய அனுமதிக்க மாட்டோம்.

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X