Advertisement

பார் உரிமையாளரிடம் மாமூல் கேட்கும் போலீஸ் ஏட்டு வைரலாகும் ஆடியோ

பொது ஏப்ரல் 12,2021 | 14:15 IST

Share

புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட செம்பியம் காவல் நிலைய பகுதியில் பார் உரிமையாளரிடம் செம்பியம் காவல் நிலைய ஏட்டுபேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. செல் போனில் பேசும் ஏட்டு, புதிதாக வந்துள்ள பெண் இன்ஸ்பெக்டர், வாங்க மாட்டார் என்று பார்த்தால் அவரும் கேட்கிறார். எனவே, மாதாமாதம் தரவேண்டிய பணத்தை ஒழுங்காக கொடுத்து விடுங்கள் என கேட்கிறார். அதற்கு பார் உரிமையாளர், முன்பு மாதிரி வருமானம் இல்லை, கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்க, ஆனால் அதை ஏற்காத ஏட்டு, நீங்களே இன்ஸ்பெக்டரிடம் நேரில் வந்து பேசுங்கள் என கூறுகிறார். மேலும் இன்று பணம் வேண்டும் என்றும் கேட்கிறார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

J.V. Iyer
J.V. Iyer , சிங்கப்பூர். 12-ஏப்-2021 | 16:15:35 IST Report Abuse

உடனே பதவிநீக்கம் செய்யவேண்டும். இவர்கள் நாட்டிற்கு தேவை இல்லை.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X