Advertisement

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு புதிய பதவி

பொது ஏப்ரல் 12,2021 | 22:10 IST

Share

உத்தர பிரதேசத்தில் கடந்த, 1992, டிசம்பர், 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, எம்.எம்.ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட, 32 தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் இறுதியில், கடந்த ஆண்டு செப்., 30ம் தேதி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அனைவரையும் விடுவித்து, சிறப்பு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் உத்தரவிட்டார். அதன் பின், சுரேந்திர குமார் யாதவ், பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைப்பின், மூன்று துணை நீதிபதிகளில் ஒருவராக, சுரேந்திர குமார் யாதவ், சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் பொறுப்பேற்றார்.


வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Sathyanarayanan Sathyasekaren
Sathyanarayanan Sathyasekaren , . 13-ஏப்-2021 | 13:33:08 IST Report Abuse

Now idiots will come in line.to abuse the judge and support foreign religion demolishers, dont Tomball have eyes to.see the truth ? take a train and go and see Kashi, Mathura, Ayothya you can see with your own eyes of.the broken temple under the mosques.

Rate this:
Reply

மேலும் 2 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X