Advertisement

கொடைக்கானல் பகுதியில் தொடரும் பாரம்பரியம்

சிறப்பு தொகுப்புகள் ஏப்ரல் 13,2021 | 14:05 IST

Share

கொடைக்கானலை மையமாக வைத்து மேல்மலை, கீழ்மலை என பழநி வரை நுாற்றுக்கணக்கான சிறு கிராமங்கள் உள்ளன. இவற்றுக்கு தாய்க்கிராமம் தாண்டிக்குடி. இப்பகுதியில் எல்லா கிராமங்களிலும் ராஜா என்ற அந்தஸ்துடன் பட்டக்காரர்கள் என்பவர்கள் உள்ளனர். இந்த பட்டக்காரருக்கு கிராம விழாக்களில் முதல்மரியாதை அளிக்கப்படும். கிராமங்களில் மழை வேண்டுதல், கோயில் கட்டுமானம், கோயில் விழா என ஆன்மிக நிகழ்வுகளுக்கு அழைத்து கவுரவிப்பர். இதனால் பட்டக்காரர்கள் கடும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து தவவாழ்க்கை மேற்கொள்கின்றனர். பட்டக்காரர் தேர்வு முறை ஒருவர் எந்த வயதில் தேர்வு செய்யப்பட்டாலும் இறக்கும்வரை அவரே பொறுப்பில் இருப்பார். தாண்டிக்குடி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட மங்களகாந்தி சமீபத்தில் தான் இறந்தார். இதனால் புதியவர் தேர்வு அவசியமானது. தாண்டிக்குடி ஊர் சாவடியில் கரியமால் கோயில் அருகே ஜல்லிக்கோட்டை என்ற நடுகல் உள்ளது. இதனை கோயில் பூஜாரி வணங்கி அருள்பெற்று புதியவரை தேர்வு செய்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X