Advertisement

மேற்கு வங்காளம் முர்ஷிதாபாத்தில் 14 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

பொது ஏப்ரல் 13,2021 | 14:35 IST

Share

மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெற உள்ள முர்ஷிதாபாத் பகுதியில் 14 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 4 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 4ம் கட்ட தேர்லின்போது துப்பாக்கிச்சூடு நடந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் வரும் 17ந்தேதி 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் நடைபெற உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஷாம்ஷெர்கஞ்ச் பகுதியில் இருந்து 14 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

shyamnats
shyamnats , இந்தியா. 14-ஏப்-2021 | 08:44:36 IST Report Abuse

நாங்கள் தான் எல்லாவற்றையும் இலவசமாகவே கொண்டிருக்கிறோமே? வீட்டில் உள்ள மின் சாதனங்கள் முதல் இருபத்தைந்து கிலோ அரிசி வரை, விழாவிற்கு தனியாக தொகை என்று. பின்னர் எதற்காக தனியாக சம்பளம்?

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X