Advertisement

இளமை வேகம்... தோனி விவேகம்

பொது ஏப்ரல் 21,2021 | 11:23 IST

Share

ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி கேப்டனாக உள்ள தோனிக்கு 39 வயதாகிறது. இவரால் துடிப்பாக செயல்பட முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து தோனி கூறுகையில்,‛‛என்னை பொறுத்தவரை இளம் வீரர்களுக்கு நிகராக செயல்பட வேண்டியுள்ளது. அவர்கள் வேகமாக செயல்படுகின்றனர். இதற்கு ஏற்ப நான் சவால் கொடுப்பது நல்ல விஷயம். செயல்திறனுக்கு எப்போதும் உத்தரவாதம் அளிக்க முடியாது. 24 வயதில் நான் சிறப்பாக செயல்படுவேன் என உத்தரவாதம் அளிக்கவில்லை. இதே போல 40 வயதிலும் அளிக்க முடியாது. மக்கள் என்னை நோக்கி உடற்தகுதி இல்லாதவன் என்று சொல்லாமல் இருந்தாலே போதுமானது,''என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X