Advertisement

தடுப்பூசி இறக்குமதி வரி ரத்தாகிறது!

பொது ஏப்ரல் 21,2021 | 18:20 IST

Share

கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் ரெம்டிசிவர் ஊசி மருந்தின் தேவை அதிகரித்த நிலையில் அதன் விலையை குறைக்கும்படி பார்மா கம்பெனிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, 7 முக்கிய பார்மா கம்பெனிகள் ரெம்டிசிவர் விலையை 40 சதவீதம் வரை குறைத்தன. இந்நிலையில், ரெம்டிசிவர் மருந்து மற்றும் அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன்மூலம், ரெம்டிசிவர் விலை மேலும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கான இறக்குமதி வரியையும் ரத்து செய்வது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, தடுப்பூசிகள் மீது 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இம்மாத இறுதியிலோ அடுத்த மாத தொடக்கத்திலோ இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் கொடுக்கும்படி அந்நிறுவனங்கள் மத்திய அரசிடம் கேட்டு வருகின்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X