Advertisement

சுப்ரீம் கோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பொது ஏப்ரல் 22,2021 | 15:38 IST

Share

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தைத்தொடர்ந்து, 2018 ம் ஆண்டில் ஆலையை தமிழக அரசு மூடியது. கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மூடப்பட்டிருக்கும் தங்களது ஆலையில் 2 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் உள்ளன; இங்கு, தினமும் ஆயிரம் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். எனவே, ஆலையை திறந்து பராமரிக்கவும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கவும் அனுமதி வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், ஸ்டர்லைட்டை ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் துஷார் மேத்தா தெரிவித்தார். அதைக் கேட்ட தலைமை நீதிபதி ரமணா, கொரோனா நோய்க்கு ஆக்சிஜன் முக்கிய மருந்து.. எனவே கோர்ட் தாமாக இந்த வழக்கை விசாரிக்கும் என்றார். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தயாராக இருக்கிறோம்; ஆலையை திறக்க அனுமதி தாருங்கள் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும் ஸ்டெர்லைட் ஆலை தலைமைச் செயல் அதிகாரி பங்கஜ் குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Ramona
Ramona , யுனைடெட் கிங்டம். 22-ஏப்-2021 | 16:04:15 IST Report Abuse

வந்ததா ஆபத்து, போராட்டம், பஸ்கள் ஓடாது, கடையடைப்பு 12 மணி நேரம் பந்த், தமிழ் இனிமே கொதித்துப் போராடப்போகிறது. செய்திப் பிரிவுக்கு இனி ஓயாது வேலை. பசிக்கு சோர் இருக்குமோ என்ற கவைல இருந்தாலும்,இனி போராட்த்திற்கு பஞ்சம் கிடையாது.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X