Advertisement

துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்

பொது ஏப்ரல் 22,2021 | 18:05 IST

Share

கிருஷ்ணகிரி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் வயது 29. ஆயுதப்படை போலீஸ்காரர். 2013ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட நீதிபதி கலைமதியின் பாதுகாவலராக 2020 டிசம்பர் முதல் பணியாற்றி வந்தார். வழக்கம்போல நேற்று காலை பணிக்கு வந்தார். பணி முடிந்து நீதிபதி புறப்பட்டார். ஆனால் அன்பரசன் வீடு வந்துசேரவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. பெற்றோர் பதற்றமடைந்தனர். இன்று காலை நீதிபதியை சந்தித்து அன்பரசன் வீட்டுக்குவராத விஷயத்தை கூறினர். அவர்களுக்கு நீதிபதி சமாதானம் சொல்லி அனுப்பி வைத்துள்ளார். இதனிடையே, நீதிமன்றத்தின் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டில் அன்பரசன் பிணமாகக் கிடப்பதை துப்புரவு ஊழியர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்துள்ளார். மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அன்பரசனுக்கு 6 மாதத்திற்கு முன் தான் திருமணம் நடந்துள்ளது. மனைவி அருணா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஏப்ரல் 13 அன்று தெலுங்கு வருடபிறப்பு கொண்டாட மாமனார் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார். அங்கு கணவன் மனைவிக்கு பிரச்னை ஏற்பட்டது. அன்பரசனுடன் வர அருணா மறுத்தார். பல முறை போனில் கூப்பிட்டபோதும் அருணா வரவே முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X