Advertisement

கணித ஆசிரியர் கைது

பொது ஏப்ரல் 22,2021 | 19:54 IST

Share

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாய் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. கோவிந்தன் கணித ஆசிரியராக உள்ளார். இந்த பள்ளியில் பயிலும் ஒரு மாணவி 8 ம் வகுப்பிலிருந்து 9ம் வகுப்புக்கு செல்கிறார். 9ம் வகுப்பு பாடப்புத்தகங்களை இப்போதே கொடுக்கிறேன் வா என சொல்லி மாணவியை இரு தினங்களுக்கு முன் கோவிந்தன் பள்ளிக்கு அழைத்துள்ளார். பள்ளிக்கு சென்ற மாணவி, அழுதபடியே வீட்டிற்கு வந்தார். ஆசிரியர் திட்டியிருப்பார் என முதலில் பெற்றோர் நினைத்தனர். தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் பெற்றோர் சந்தேகமடைந்து விசாரித்தபோது ஆசிரியர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என மாணவி அழுதபடியே சொன்னார். பெற்றோர் உடனே போலீசில் புகாரளித்தனர். இன்ஸ்பெக்டர் லதா, போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கோவிந்தனை கைது விசாரணை நடத்தி வருகிறார்.


வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Mani . V
Mani . V , சிங்கப்பூர். 23-ஏப்-2021 | 10:05:12 IST Report Abuse

இவனையெல்லாம் கல்லால் அடித்தே கொல்ல வேண்டும்.

Rate this:
Reply

மேலும் 2 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X