Advertisement

மே 1, 2ல் முழு ஊரடங்கு ஐகோர்ட் பரிந்துரை

பொது ஏப்ரல் 26,2021 | 18:00 IST

Share

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது, மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க அரசுக்கு கோர்ட் பரிந்துரைத்தது. 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், அதற்கு முந்தைய நாளில் பொது மக்களும், அரசியல் கட்சியினரும் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. அதன் மூலம் தொற்று பரவல் அதிகரிக்கும். அதை தடுக்கும் வகையிலேயே ஊரடங்கு பிறப்பிக்க பரிந்துரைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை 28ம் தேதியே அறிவிக்கலாம். வாக்கு எண்ணிக்கை தொடர்பான தேர்தல் பணிகளுக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி வழங்கலாம் என்றும் ஐகோர்ட் அறிவுறுத்தியது.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Mani . V
Mani . V , சிங்கப்பூர். 26-ஏப்-2021 | 23:35:20 IST Report Abuse

ஏற்கனவே பெட்டி மாற்றி விட்டாலும் அடாவடியான முடிவை அறிவிக்கும் பொழுது கலவரம், பரபரப்பு வரக்கூடாது பாருங்க. அதுக்கு ஊரடங்கை போட்டு விட்டால் பிராபிளம் சால்வுடு.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X