Advertisement

கொரோனா தடுப்பு பணிகள் தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு!

பொது ஏப்ரல் 26,2021 | 19:17 IST

Share

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். " இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக 1.5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். மத்திய அரசின் உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் இலவசமாக போடப்படும் கொரோனா தடுப்பூசி இதுவரை ஏழை மக்களுக்கு போடப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே, போர்க்கால அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை போட உத்தரவிட வேண்டும் என பொது நல மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பரவாயில்லை எனக் கூறி வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து (6) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Barathraj
Barathraj , . 27-ஏப்-2021 | 07:43:38 IST Report Abuse

எடப்பாடியார் கஷட்டப்பட்டு பணியாற்றினார் ,அப்போது நீதிமன்றம் எந்த ஒரு பாராட்டும் தெரிவிக்க வில்லை. ஆனால் இப்போது இவங்க எதிவுமே செய்யாமல் காலத்தை்கழித்துக்கொண்டு இழுக்கிறார்கள் , அதற்கு பாராட்டு....என்ன கொடும சார் இது?

Rate this:
Reply

மேலும் 5 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X